புதுநிலா புன்னகைத்தாய்
பௌர்ணமி என உரைத்தாய்
மயங்கினேன் பெண் உனக்காய்
மறைமுகக் காதலிட்டாய்
விண்ணிலே வெட்கம் சிட்டாய்
பறந்ததே பூக்கும் மொட்டாய்
புரிந்ததால் புலமைப் பித்தாய்
புகழிடப் போர் தொடுத்தாய்
பொய்களால் என்னை சுட்டாய்
பொறுமைக்கு விலங்கு இட்டாய்
தாயக தாய்மை சொத்தாய்
இருந்த மண் பெண்மை வித்தாய்
புனலிடை வெம்மை என்றாய்
அனலிடை குளிர்மை கொண்டாய்
திருமணத் திடலில் நின்றாய்
நகைகளால் மின்னும் முத்தாய்
உன்நெற்றியில் சிவப்புப் பொட்டாய்
இருக்கும் என் ஆண்மை பட்டாய்
நம்பினேன் இவற்றை முற்றாய்
நளினத்தில் நகைமை விட்டாய்
நடித்திடும் நாடகக் கதையாய்
எழுதிடும் கவிஞர்கள் பாட்டாய்
ஆடிடும் நடன நளிர்ப்பாய்
இசைத்திடும் நாதங்கள் மெட்டாய்
போனதே
என் காதல்
காற்றாய்