பொங்கல் வைத்து படையலிட வருகிறாய்; அய்யனார் கையில் பூ!
உன் பார்வை பற்றவைத்தது; உருகி உருகி எரிகிறது உயிர்!
என் கண்ணீர் துளிகளால்; உனக்கு வைரமாலை!
உன் அறை உன் பிம்பம் என் கோவில் என் சாமி!
மூங்கில் காடு புகும் காற்று அழுது திரும்புகிறது; உன் நினைவில் அரற்றும் எனைப் போலவே!