காதல்
வரையப்பட்ட காகிதமாய் நான்
ஏன் வரைந்தோம் என உன் அப்பா...
காகிதத்தில் உன்பெயரை
எழுதுகிறேன்...
முடியவில்லை
கையில் எழுதுகிறேன்
முடியவில்லை
சுவரில் எழுதுகிறேன்
முடியவில்லை
ஒன்று மட்டும் புரிந்தது
பேனாவில் மை இல்லையென்று...
வானத்தில் நிலாவை
ரசித்தவளிடம்
நிலாவை ஏன் வானத்தில்
பார்க்கிறாய்
கண்ணாடியைப்பார் என்றேன்...
வெட்கத்தில் ஒடுகிறாள்
பாவிபுள்ள எதைச்சொன்னாலும் நம்புது...
இனிமேல் குடிக்கமாட்டேன்
என சத்தியம் கேட்டாய்
பதிலுக்கு இனிமேல் குளிப்பேன்
என சத்தியம் தருவாயா?
ஒரு கவிதை எழுது என்றாள்
அவள் பெயரை எழுதினேன்
வெட்கப்படுகிறாள்
அவளுக்குத் தெரியாது நான் ஒரு
மொக்கை கவிஞன் என்று...
முத்தம் வெட்கம் சப்தம்
முத்தம்
ஆளரவமற்ற அன்றைய மாலையில்
அவள் கொடுத்தது எடுத்து சென்றது
என் உயிரை
நடை பிணமாய்
அலைகிறேன் அவளைத் தேடி
என் உயிரை மீட்க!
வெட்கம்
இதழ் பதித்து இட்ட
போது இச் என்ற சப்தம்
அருகாமை நாய் அதை
அழைத்ததாய் எண்ணி வந்த
போது அவளிடம் ஒரு சிரிப்பு
இதுதான் வெட்கமோ!
சப்தம்
சப்தமிட்டு சொல்லாதே
நீ என் காதலி என்று
பறவைக் கூட்டம் என்னைத்
தேடிக் கொல்ல்க் கூடும்
காதல் பரிசு
என்னில் பாதியாய்
வாழ்வின்
மீதியாய் கலந்தாய்..
என் வெற்றியில் நீ
மகிழ்ந்தாய் - தோல்வியில்
உற்சாகமூட்டினாய்.
கண்ணசைவில் சித்திரங்கள்
படைத்தாய் - வாழ்வை
வசந்த கால சோலையாக்கினாய்...
என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..
கோபங்களையும் சிரிப்பால்
புன்னைகை ஆக்கினாய்..
உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...
என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கின்றார் என்றால் 20 வருடங்கள் தூக்கத்தில் கழிகிறது. இந்த தூக்கத்திற்காகவே இரவினை உண்டாக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான்:
இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்-குர்ஆன் 28: 73)
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 78: 9)
மேற்கூறிய அல்-குர்ஆனிய வசனங்களில் தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கியிருக்கிறான் அல்லாஹ். ஆனால் அந்த தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. குறட்டை பிரச்சினையால் இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்தில் தூங்கினாலும் பக்கத்தில் படுத்திருப்பவர்(கள்) பாடு படுதிண்டாட்டம்தான். ஆக, குறட்டை பிரச்னைப்பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.
பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம்.
குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும். குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு.
அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு.
குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும்.
பாலிஸோம்னோகிராபி என்ற டெஸ்ட்டுகள் மூலம் குறட்டை மூச்சுக் குழாயில் காற்று உட்புகும் தன்மை கால்களின் இயக்கம் அல்லது அசைவு உடலின் இயங்கு நிலை, நாடித்துடிப்பு, ஆக்ஸிஜன் சமச்சீரான நிலை உள்ளிட்டவற்றை கண்காணித்து தெரிந்துக் கொள்ள முடியும்.
முன்பெல்லாம் குறட்டைக்குச் சிகிச்சை கிடையாது, ஆனால் இப்போது நிறைய யுருலோ டயாலிட்டோபேரிங்கோ பிளாஸ்டி இது ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரியோ என்று எண்ணி விடாதீர்கள். தொண்டையில் செய்யப்படும் ஆபரேஷன்தான் இது. தவிர ரேடியோ ஃப்ரிக்குவின்சி முறை (Radio Frequency Method) எனப்படும் நவீன சிகிச்சையும் வந்திருக்கிறது. இம்முறைகளின் மூலம் குறட்டையை பெருமளவு கட்டுப்படுத்திவிட முடியும். இவை இரண்டுமே ஆபரேஷன் செய்து குறட்டையை குறைக்கும் முயற்சிதான். நல்ல தேர்ந்த டாக்டரிடம் மட்டுமே இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு பாதிப்புகள் உண்டாகும் ஆபத்து உண்டு.
மேலும் குறட்டையை தவிர்க்க உடல் பருமனாகாமல் தவிர்த்து விடுவது அவசியம். அதுபோல் நாள்பட்ட அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாகச் சிகிச்சை எடுப்பது நல்லது. கழுத்து தொண்டையின் மேல் பகுதியில் கொழுப்புச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான மூச்சுப் பயிற்சி எடுப்பதாலும் குறட்டையை தவிர்க்க முடியும். அது மட்டுமில்லாமல் மது அருந்தும் பழக்கம் இருக்கவே கூடாது.
காதல் போதை
தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே
நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.
அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்
அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால்.
ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே
பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.
நீ என்ன
விக்கிரமாதித்தனின்
வம்சாவளியா
என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.
***************************************************
நீ என்னை ஏற்கா
விட்டால் என்ன...
மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்
மலராய் பூத்து
உன் கூந்தலில்
அமர்வேன்
மருதானியாய்
உன் விரல்களையும்
சிவக்கச்செய்வேன்
வளையலாய்
உன் கைகளோடு
உறவாடுவேன்
புற்களாய்
உன் பாதம் வருடுவேன்
ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.
இருட்டில் மறைந்திருந்தேன். தூரத்தில் வண்டியின் சத்தம் கேட்டது. வா..வா.. உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று மனதுள் நினைத்துக் கொண்டேன். இந்த தெரு மெயின் ரோடிலிருந்து உட்புறமாய் திரும்பும் தெரு. நிச்சயமாய் இம்மாதிரியான ஆள் அரவம் அற்ற இரவு நேரத்தில், என்னை எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பார்ப்பு இல்லாத நேரத்தில் தாக்குவது சுலபம். மிக சிலரே இம்மாதிரியான நேரங்களில் சுதாரித்து, சட்டென வேறு பாதையையோ, அல்லது எதிர் தாக்குதலை கொடுக்க வல்ல ஆட்களாய் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலான ஆட்கள், ஓடி வரும் அரவத்திலேயே, பயந்து உடல் விதிர்த்து தடுமாறி, வண்டியை அப்படியே விட்டு, விட்டு, கீழே விழுந்தெழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியிருக்கிறார்கள். சிலர் என்னிடம் சண்டையிட்டு போராடியிருக்கிறார்கள். சிலர் என்னிடம் மாட்டியுமிருக்கிறார்கள்.
வண்டியின் சத்தம் மிக அருகில் கேட்கிறது இருங்கள் வருகிறேன். ரோட்டின் திருப்பத்தில் இரண்டு லைட்டுகள் தெரிந்தது. நிச்சயம் கார்தான். அவ்வளவு தூரத்தில் வண்டியின் கலர் எனக்கு தெரியவில்லை. இரவு நேரத்தில் அருகில் வரும் வரை இது ஒரு பிரச்சனை. நான் காத்திருப்பது ஒரு மாதிரியான, பழுப்பு, அல்லது அழுக்கு கலர் காரும், இருட்டிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய ஒரு பைக்கையும் தான். பைக்கின் கலர் ஒரு அழுத்தமான வண்ணம் அதலால் சரியாக சொல்ல முடியாது. இவர்கள் இருவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு மாதமாய். ஆம் ஒரு மாதமாய்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர்களை தேடித்தான் ஒவ்வொரு இரவும் அங்கிங்கு நகராமல் இந்த இருட்டு திருப்பத்தில் காத்திருக்கிறேன். அவர்கள் ஒருவன் என்று நினைத்துத்தான், திடுக்கிட்டு தாக்க முயற்சிக்கிறேன். நான் முழுசாய் தூங்கி ஒரு மாதமாகிவிட்டது.
ஆனால் நான் தூக்கமிழந்ததுக்கு காரணம், இந்த இரண்டு பேர்களால் மட்டுமல்ல. நிஷாவால். அந்த பெயர் கூட அவளுடன் வ்ந்த ஒரு பெண் கூப்பிட்டபோது தெரிந்தது. நிஷா.. எவ்வளவு அழகான பெயர். அவளுக்கு அந்த பெயர் வைத்த மாகானுபாவர்களுக்கு ஒரு முத்தம். நிச்சயமாய் அவளை போல ஒரு அழகியை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. ஒரு இலக்கில்லாத மாலை நேரத்தில் கால் போன போக்கில் இந்த தெருவழியாய் வந்த போதுதான் அவளை பார்த்தேன். அவளை பார்த்த மாத்திரத்தில் எனக்குள் சிலிர்த்தது. எனக்கானவள் என்ற ஒரு உணர்வு உடலெங்கும் பதறி, பதறி ஓடியது. காதல் ..காதல்.. என்று சொல்வார்களே அது இதுதானோ..? லேசாக மனதின் ஓரத்தில் சந்தோசமாய் இருந்தது. அவள் என்னை கடந்த போது நான் மட்டும் அவளை பார்க்கவில்லை என்னைப் போலவே இன்னொருவனும் பார்த்துக் கொண்டுதானிருந்தான். நல்ல கரு கருவென கட்டுமஸ்தாய். ஆனால் அவன் முகத்தை பார்க்கையிலேயே அவன் நல்லவனில்லை என்று தோன்றியது. அவன் என்னை பார்த்த பார்வையிலும் அவ்வளவு சிநேகமில்லை.
அவள் போன திசையையே பார்த்து கொண்டிருந்தேன். பின் பக்கத்தில் சூடான மூச்சு காற்று உணர்ந்து திரும்பினேன் மிக அருகில் அந்த கருந்தடியன். நிச்சயம் ஏரியா விட்டு, ஏரியாவந்து சைட் அடிப்பதை பற்றி பேசத்தான் வந்திருப்பான் என்று தெரியும். வீண் வம்பு வேண்டாம் எனறு பின் தங்கினேன். அது அவனுக்கு ஒரு திமிரை கொடுத்திருக்க வேண்டும். மேலும் கிட்டே வந்து லேசாய் கண்களில் சினம் காட்டினான். அவனருகில் நான் மிகவும் சோனியாய் உணர்ந்தேன். இது சண்டையிடும் தருணமல்ல. அதுவும் நிஷா முன்பு ஏதாவது ஆகிவிட்டால் மானம் போய்விடும். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மெல்ல பின்தங்கி, அவனைவிட்டு விலகி நகர்ந்தேன். பின்னால் அவன் நடுத்தெருவில் நின்று என்னை பார்த்த பார்வை மிக ஏளனமாய் இருந்தது.
அன்று தான் பின்வாங்கினேனே தவிர அடுத்த நாள் அதே தெருவுக்கு கொஞ்சம் முன்னமே சென்றேன். இந்த முனைக்கும், அந்த முனைக்கும் உலாத்தியபடி இருக்கையில் தான் அந்த கோடை வெய்யிலிலும் சில்லென காற்று உணர்ந்து, திரும்பினேன் அவள் தான் என் நிஷாதான். அவள் நடையில் இருக்கும் பெண்மை என்னை ஏதேதோ செய்தது. நேற்று வந்த பெண்ணுடனே இன்றும் வந்திருந்தாள். அவளுடன் நிஷாவும் மெதுவாய் என்னை கடக்க, அவள் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் மிகவும் நெருங்கி நடக்க ஆரம்பித்ததை பின்னால் உணர்ந்தவள், சட்டென திரும்பி பார்த்தாள், ஒரு கணம்.. ஒரே ஒரு கணம் தான் ஆயிரம் அர்த்தங்கள் அவள் பார்வையில். உடலெங்கும் சந்தோஷம் பரவி இன்னும் நெருங்கி அவளை பார்த்து சிரித்தேன். அவள் தன் நடையை மெதுவாக்கி, என்னையே திரும்ப, திரும்ப பார்க்க. எனக்குள் நிச்சயமானது ஆம். நிச்சயம் இது காதல் தான். நிஷா எனக்குத்தான் என்ற நினைப்பே பெரிய பலத்தை கொடுக்க, அவளை இன்னும் நெருங்க முயற்சிக்க, திரும்பி பார்த்த நிஷாவின் கண்களில் இப்போது காதல் இல்லை பயம் இருந்தது.
ஆம் பயம் தான் அவளுக்கு எதிரே அந்த கருந்தடியன் நின்றிருந்தான். நிஷாவுடன் வந்த பெண், சற்று தயங்கி அவளை வேறு பக்கமாய் இழுத்து போக முற்பட, அவளை நகரவிடவண்ணம் க.தடியன் மறித்தான். இப்போது கூட வந்த பெண் அவளை விட்டு விட்டு ஓட, நிஷா ஒன்றும் புரியாமல் திகைத்திருந்த நேரத்தில், நிஷாவின் மேல் கருப்பன் பாய்ந்தான். நிஷாவின் முகத்தில் நகம் பட்டு ரத்தம் வர, அவள் கதறியபடி எனனை நோக்கி வருவது தெரிந்தது. எங்கிருந்துதான் அந்த தைரியம் வந்ததோ.. எனக்கு தெரியாது அது அந்த பைரவருக்கே வெளிச்சம். ஆக்ரோஷமாய் அந்தரத்தில் பறந்து கருந்தடியன் மேல் பாய்ந்து கட்டிப் புரண்டு, புழுதி பரக்க, தெருவில் சண்டையிட்டேன். புரண்ட வேகத்தில் அவன் என் காதை கடித்துவிட்டான். வலி பொறுக்க முடியாமல் பதறி விலக முற்பட, என் காதில் வழியும் ரத்தத்தை பார்த்து பயந்த நிஷா கோபத்துடன் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கருப்பனை தாக்க முயற்சித்தாள். அதை பார்த்த நான் அவளை தடுக்க ஓடும் பொழுது, குறுக்கே இருந்த பைக் மீது மோதி தரை தேய்த்து விழுந்தேன். மோதிய வேகத்தில் அரைகுறையாய் நின்றிருந்த பைக், கீழே சரிய, பைக்கின் கண்ணாடி தரையில் விழுந்து உடைந்தது, அது வரை தெருவில் நடந்த சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த பைக்காரன், வண்டியை கூட தூக்கி நிறுத்தாமல் கீழேயிருந்த ஒரு பெரிய செங்கல்லை எடுத்து என்னை குறி பார்த்து வீச, குறுக்கே வந்த நிஷாவின் தலையில் பெரும் வேகத்துடன் “சொத்”என்றா சத்தத்துடன் பட, அப்படியே என்னை பார்தபடி எந்த ஒரு சத்தமில்லாமல் அடங்கினாள் என் நிஷா.
என்ன செய்யவது என்று தெரியவில்லை. ஒரு பக்கம் நிஷா, இன்னொரு பக்கம் கல்லெடுத்தடித்தவன், என் கோபத்தையெல்லாம் திரட்டி அவன் மேல பாய முற்படும் போது, பின்னாலேயெ கருந்தடியனும் என்னுடன் சேர்ந்து பாயந்தான். பைக்கை கிளப்பியவனின் முகத்தில் இப்போது பீதியை பார்த்தேன். அப்போது பக்கத்தில் இருந்த அழுக்கு கலர் கார்காரன் காரை கிளம்பினான். நானும், கருந்தடியனும் அந்த பைக்கை துரத்த, எனக்கு பின்னால் வந்த கருந்தடியன் மேல் இடிக்க கார் இடித்தது. தடுமாறி விழுந்தவன் மேல் காரின் முன் சக்கரம் ஏறியது. தீனமான ஒரு அலறலுடன் அவன் அடங்க, என்னால் எதுவும் செய்ய முடியாமல் பதறியடித்து காரின் எதிர்பக்கத்திற்கு ஓடி தப்பினேன். அன்றிலிருந்து காத்திருகிறேன். பழி வாங்குவதற்காக, என் நிஷாவின் சாவிற்கும், என் காதலுக்கு எதரியானாலும் நிஷாவை காதலித்த பாவத்திற்காக உயிரை விட்ட அந்த பெயர் தெரியாத கருப்பனுக்காகவாவது பழி வாங்கியே தீர வேண்டும். அவர்களுக்காகத்தான் காத்திருக்கிறேன் இந்த தெரு முனையில்.
கொஞ்சம் இருங்கள் இதோ வருகிறேன. கார் என் இடத்தை நெருங்க, உற்றுப் பார்த்தேன் சரியாய் கலர் தெரியவில்லை. சனியன் பிடித்த தெருவிளக்கு எப்பவுமே எரியாது. காரினுளிருந்து “திடும்.திடும்” என்று ஒலியெழுப்பி வர, திடு, திடுவென காரின் முன் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தேன். பாய்ததில் சரியான டைமிங் இல்லாததால் மிஸ்ஸாகி பின்னங்கால் காரின் முனையில் இடித்துவிட, வலி தலைகுள் வெடிக்க.. தீனமாய் “அவ்..அவ்..அவ்..அவ்.. “ என்று அலறியபடி, காரின் பின்னால் விந்தியபடி “லொள்.. லொள்” என்று குரைத்தபடி ஓடினேன். இன்றைக்கு மிஸ்ஸாகி விட்டார்கள் . இன்னொரு நாள் வராமலா போகப் போகிறது. காதல், பழி வாங்கும் உணர்ச்சியெல்லாம் உங்களுக்கு மட்டுமா சொந்தம். எங்களுக்கும் தான்.. இருங்க மூச்சிரைக்கிறது.
காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என் னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...
மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.
அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.
சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ள சில யோசனைகள்...
* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.
நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.
* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.
அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.
* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.
* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.
* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.
அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது.
எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள். பாதுகாப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர்.
இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவா கின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.மரியாதை ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலை யாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
அன்பு வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வு களே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர் கள் உணர்வு களுக்குக் கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும்.
"என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்" என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும். நேர்மை நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும்.
நேர்மை இல்லாத குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு.
நீ நுழையும்போது
கதவுகளைத் தட்டவேண்டும்
என்பதில்லை
ஒரு நூலகத்திற்குள்
நுழையும் சுவாதீனத்துடன்
நீ தயக்கமின்றி
உள்ளே வரலாம்
நாங்கள் முத்தமிட்டுக்கொள்ளும்போது
நீ ஜன்னலுக்கு வெளியே
பார்க்கவேண்டும் என்பதில்லை
ஒரு முத்தம் எவ்வளவு
வாதையுடன் இடப்படமுடியும்
என்பதை நீ பார்ப்பதற்கு
இதுதான் சந்தர்ப்பம்
நாங்கள் அணைத்துக்கொள்ளும்போது
நீ யாரையோ அணைத்துக்கொண்டதை
நினைக்க வேண்டியதில்லை
எங்கள் அணைப்புகளின்
ரகசிய ஒப்பந்தங்கள்
உன்னால் படித்தறிய இயலாதவை
வேட்கையில் எங்கள்
முகங்கள் சிவக்கும்போது
நீ அவ்வளவு மௌனமாக
இருக்கவேண்டும் என்பதில்லை
வேட்கைகளின் குளறுபடிகள் பற்றிய
ஒரு சிறந்த வர்ணனையை
நீ எங்களுக்காக வழங்கலாம்
நாங்கள் ஆடைகளைக்
களைந்துகொள்ளும்போது
நீ கண்களை மூடிக்கொள்ள வேண்டும்
என்பதில்லை
எங்கள் திறந்த உடல்களின்
காயம்பட்ட நிழல்கள்
அந்தச் சுவர்களில்
நிம்மதியற்று அலைவதை
நீ பார்க்கலாம்
நாங்கள் மூர்க்கமாகப் புணரும்போது
உன் ரத்த நாளங்கள் சூடாகி
நீ அமைதியிழக்க வேண்டியதில்லை
ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்து
நாற்காலியில் அமர்ந்துகொள்
டிஸ்கவரி சேனலின்
ஒரு வேட்டைக் காட்சியைப்
பார்ப்பதுபோல
அவ்வளவு விலகலுடன்
ஒரு பிம்பத்தைப் பார்பதுபோல
பார்க்கத் தகுந்ததுதான் அது
நாங்கள் தளர்ந்து விழும்போது
நீ அத்தனை தனிமை உணர
வேண்டியதில்லை
நாங்கள் அதைவிடவும்
தனியாக இருந்தோம்
எதுவும் அற்றவர்களாக
இனி எப்போதும்
மீளமுடியாதவர்களாக
ஏ ராஜா அம்மாவையும் பாட்டியையும் எங்கடா காணோம் என்றேன் என் மகனிடம். அப்பா, அம்மா அடுத்த தெருவுல இருக்கிற என் பிரண்டு மகேஷ் வீட்டுக்கு போயிருக்காங்க அம்மா.. பாட்டி எங்கபோனாங்கன்னு தெரியலப்பா.., நான் போய் அம்மாவ கூட்டிட்டு வரட்டாப்பா என்றான். சரிடா அப்பா வந்திருக்கேன்னு சீக்கிரம் கூட்டிட்டுவா என்ன என்று ராஜாவை அனுப்பி வைத்தேன். இதோ என் பையன் வந்திட்டான் அக்கா.. நா போயிட்டுவாரேன். என்று சொல்லிக்கொண்டிருந்தாள் கௌரி. அம்மா, அப்பா வந்திருக்காங்க வா போகலாம்.., என்று அவசரப்படுத்தினான் ராஜா.சரி கௌரி பாத்து பத்திரமா நடந்துக்கோ என்று சொல்லி வழியனுப்பினாள் மகேஷ் அம்மா. சரிக்கா நா வாரேன் என்று கிளம்பினாள் கௌரி. உங்கப்பா வந்து நேரமாச்சாடா., இல்லம்மா இப்பதான் ஒரு 5 நிமிசத்துக்கு முன்னாடி வந்தார் என்று சொன்னான் ராஜா.
ஏ கௌரி எங்கப்போனே.. என்று கேட்டேன் என் மனைவியிடம். இல்லீங்க மார்க்கெட் போகும்போது மகேஷ் அம்மா வீட்டுக்கு கூப்பிட்டாங்க அதான் சமையல முடிச்சிட்டு போயிட்டு வந்தேன் என்று சொன்னாள் கௌரி. சரி அதுகிடக்கட்டும், அம்மாவை எங்கே? என்று கேட்டேன். ஓ உங்கம்மாவா எங்கபோனாங்கன்னு தெரியல.. 2 நாளா ஆளக்காணோம் என்று அசால்டாக சொன்ன கௌரியை பளார் என்று கன்னத்தில் அறைந்தேன். என்னடி சொல்லுறே அம்மாவ காணோமா... எங்கப்போனாங்க சொல்லுடி சொல்லுடி மறுபடியும் கன்னத்தில் பளார் என்று அறைந்தேன். அம்மாவ விட்டுட்டு அசால்ட்டா சொல்லுறே.. என்ன நெஞ்சழுத்தம் உனக்கு, ராஸ்கல் என்று கோபத்தின் உச்சியில் நான்.
சே என்ன இவள்.. பொறுப்பில்லாதவள்., ஒருவேளை அக்கா வீட்டுல அம்மா தங்கிட்டாங்களோ..அப்படின்னாலும் எங்கிட்ட போன்ல சொல்லிருப்பாங்களே.. 10 நாள் ஆபிஸ் வேலையா பெங்களுரு போயிருந்த சமயத்துல இப்படி ஆயிருச்சே.. இப்ப என்ன செய்ய., என்று மனவேதனையுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு நினைவுகளை பின்னோக்கி அசைப்போட்டு கொண்டிருந்தேன்.
அம்மா அம்மா எங்கம்மா இருக்கே.. என்று சொல்லியபடியே வீட்டினுள் நுழைந்தேன். டேய்! என்ன எப்பப்பார்த்தாலும் அம்மா அம்மா தானா., நான் ஒருத்தன் இங்க குத்துக்கல்லாட்ட உக்கார்ந்திருக்கேன் கண்ணுக்கு தெரியலியா என்று அப்பா அருணாச்சலம் கேட்டார். அதானே நல்லாச்சொன்னீங்கப்பா எப்பப்பார்த்தாலும் இவனுக்கு அம்மா அம்மாதானா., நாமெல்லாம் இல்லியா என்று அக்கா செல்வி அங்கலாய்த்தாள். அடஅடஅடா., எப்ப்பார்த்தாலும் அவனை வம்புகிழுக்காம அப்பாவுக்கு மகளுக்கும் தூக்கமே வராதுபோல.., என்று ச்மையல்கட்டுல இருந்து அம்மா பர்வதம் வந்தாள்.
அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கும்மா ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா., எக்ஸ்போர்ட் கம்பெனியில எக்ஸ்கியூடிவ் அசிஸ்டண்ட் மேனேஜர் வேலை. மாதம் பத்தாயிர ரூபாய் சம்பளம்., பின்னாடி டபுளா இன்கிரிமென்ட் ஆகும்ன்னு சொல்லிருக்காங்க. என்றேன் மகிழ்ச்சி பொங்க. அப்பா அம்மா அக்கா எல்லோருக்கும் மிகுந்த சந்தோசம். பாத்தியா செல்வி நம்மிடம் சொல்லாம நேரா அம்மாட்ட சொல்றான்.,ம் ம் நடக்கட்டும் என்றார் அப்பா. அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா., எல்லாம் உங்க நண்பர் ரெக்கமென்ட்ல தான். இந்தவேலை கிடைக்க நீங்கதான் காரணம் உங்களுக்குதான் முதல்ல தேங்க்ஸ் சொல்லணுப்பா என்றேன். நீ நல்லாருந்தாலே எங்களுக்கெல்லாம் சந்தோசந்தான் என்று எல்லோரும் என்னை வாழ்த்தினர்.
சில மாதங்களுக்கு பின்னர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்தபடுக்கையாயிட்டார். முன்னேமாதிரி அவரால் எங்கும் செல்லமுடியவில்லை. அம்மாதான் அப்பாவ நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அடுத்த மாதத்தில் அப்பா காலமானார். அப்பாவின் மறைவு எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தது. இருந்தும் அம்மாதான் சமாளித்து குடும்பத்த நடத்துனாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தோம். ஒரு சில மாதங்களில் கும்பகோணத்துல இருந்து நல்லவரன் அமைஞ்சது. அக்காவுக்கும் சம்மதம்; அப்புறம் ஆறு மாதத்துல கல்யாணம் நடத்தவேண்டி இருந்தது; பணம் பற்றாக்குறை, அங்கஇங்கேன்னு கடனஉடன வாங்கி கல்யாணம் நடத்தினோம். அத்திம்பேர் ரொம்ப தங்கமானவர். எங்கக்காவ நல்லா வச்சிக்குவாருன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இன்றுவரை பொய்க்கவில்லை.
டேய் குரு! முன்னமாதிரி நான் இல்லைடா என்னால முடியல., வயசாக்கிட்டே போகுதுடா உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டேன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்டா என்று அம்மா சொன்னார்கள்.
என்னம்மா இப்பதான் அக்காவுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்கோம்; அந்த கடனே இன்னும் முடியல., அதுக்குள்ள எனக்கா! இரண்டு மூணு வருசம் கழியட்டும் அப்புறம் பார்ப்போம் என்றேன் அம்மாவிடம்.
அதெல்லாம் முடியாது., உனக்கு பொண்ணுபார்க்கத்தான் போறேன்., வீட்டுக்கு விளக்கேத்த மகாலட்சுமி கூட்டிட்டுவாரேன் பாரு; ஆமா சொல்லிப்புட்டேன் என்ற அம்மாவிடம் மறுப்பு சொல்லமுடியவில்லை.
அம்மா பெண்தேட ஆரம்பிச்சாங்க; திருச்சிக்கு சுத்துவட்டாரத்துல பார்த்தாங்க., சரியா அமையவே இல்லை. அம்மாவும் சளைக்கலை., கடைசியில நாகப்பட்டினத்துல அமைந்தது. என்ன செய்ய தஞ்சாவூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் கொஞ்சம் தொலைவுதான்.
பேரு கௌரி., நல்ல சொத்துபத்து., பெண் லட்சணமா இருக்காடா., நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பாடா., நாளைக்கே பொண்ணுபார்க்கபோறோம் ரெடியாயிரு என்ற அம்மாவின் வார்த்தைய என்னால் தட்ட முடியல. அடுத்த 2 மாதத்துல கல்யாணம் ஆயிருச்சி. கௌரி அழகாக இருந்தாள். என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.
அவளிடம் இப்போது சிலமாதங்களாக நிறைய மாற்றங்களை காண்கின்றேன். என்னவென்று கேட்டால் ஒன்றும் அவள் சொல்வதில்லை; நானும் அப்படியே விட்டுவிட்டேன். என்னாங்க கல்யாணம் ஆகி ஆறு வருசமாயிருச்சி., ஒரு கார்வாங்கலாம், புதுவீடு வாங்கணும் என்று இப்படி சிலவற்றை சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் காதில்வாங்கியும் வாங்காமலும் இருந்தேன். அப்பப்ப சத்தம் போடுவேன்; ஆனால் அடித்ததில்லை. ஆனால் இன்று அம்மாவை காணவில்லை. அந்த கோபத்தில் அடித்துவிட்டேன். இப்போது கௌரி என்ன செய்கிறாளோ., சே.. என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்; கட்டிலிலிருந்து எழுந்து சமையலறைக்கு சென்றேன்.
அங்கே ராஜா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அம்மா! சண்டையா போட்டா வீட்டவிட்டு போயிரலாமோ., நான் உன்னை அப்படியெல்லாம் செய்யவிடமாட்டேன் என்ற மகனை அணைத்த கௌரியின் கண்களிலிருந்து தாரைதாரையாக நீர் கோர்த்திருந்தது. என்னங்க என்னை மன்னிச்சிருங்க., நாந்தான் அத்தைய சண்டபோட்டு வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டேன். அத்தையின் நல்லமனசை புரிஞ்சிக்காம மத்தவங்க பேச்சை கேட்டு புத்தி தடுமாறிட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்ற கௌரியை நெஞ்சில் அணைத்து ஆறுதல் சொன்னேன்.
சரிவா அக்காவுக்கு போன் பண்ணிகேப்போம். அக்கா அம்மா அங்கே வந்திருக்காங்களா என்று கேட்டேன். என்னடா குரு! அம்மா இங்கே வரலையே.. என்னாச்சி சொல்லுடா அம்மாவ எங்கே என்றாள் செல்வி அக்கா மறுமுனையில். கௌரி சண்டை போட்டதால் அம்மா கோவிச்சிக்கிட்டுபோயிட்டாங்க. காணோம் அம்மாவை என்று வருத்தத்துடன் சொன்னேன் அக்காவிடம்.
தஞ்சாவூரில் நிறைய இடங்களில் தேடினேன். அம்மாவை காணவில்லை. பசிக்குது என்ற ராஜாவுக்கு பிரட் வாங்க கடையில் நுழையும்போது எதிரே உள்ள அனாதை ஆசிரம வாசலில் அம்மா நின்று கொண்டிருந்தாள்.
அம்மா கண்ணீருடன் வரவேற்றாள். அம்மா எங்கம்மா போனே என்னவிட்டுட்டு உன்னைய எங்கெல்லாம் தேடினேன் என்றேன் கண்களில் கண்ணீருடன். ஹைய்யா பாட்டி என்ற ராஜா, அம்மாவைக் கட்டிக்கொண்டான். கௌரியும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாள்.
**********************************
ஈரைந்து மாதம்
கருப்பையில்
வாழ் முழுதும்
உன் மனதில்...
அறியா வயதில்
தெரியாமல் செய்த பிழை
வாலிப வயதில்
தெரிந்து செய்த தவறு
இரண்டும் பொறுத்தாய்...
பள்ளி செல்லும் வயதில்
உனை வீட்டு நீங்கியதில்லை..
இன்று உனை கண்டே ஆகியது
மாதங்கள் பல..
உனை நினைக்க ஒரு தினம்
தேவை இல்லை - மறந்தால்
தானே நினைக்க !!!
தனியாக ஒரு அன்னையர் தினம் வைத்துத்தான் நமது தாயன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் .
தாமதமாக... அன்னை மன்னித்து விடக்கூடும். நான் என் தாயிடமும், பிற
தாய்களிடமும் வியந்த குணங்களையும... மேலும் என் அன்னையருடனான சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதலாவதாக, எனக்கு பிடித்த பட்டினத்தார் அவர்களின் ஒரு பாடலுடன், அன்னையரின் பெருமையை துவக்குகிறேன். "மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து வேலை மினுக்கிட்டு விழித்திருந்து சூலாகிப் பெற்றாள் ; வளர்த்தாள; பெயரிட்டாள்; பெற்ற பிள்ளை பித்தனானால் என் செய்வாள் பின்? "
தாயின் வளர்ப்பில் அல்லது கண்காணிப்பில் இருக்கிற வரை, எல்லா குழந்தைகளுமே நல்ல குழந்தைகளாகவே உள்ளன. தாயின் கண்காணிப்பில், குறைந்தது - பனிரெண்டு வயது வரையாவது குழந்தைகள் இருக்க வேண்டும். இப்படி சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. பல உளவியல் விஷயங்களும் உள்ளன.
ஒரு படத்தில் ராஜ்கிரண் இப்படி சொல்வார்."கடவுளால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி தனியாக சேவகம் செய்ய முடியாது என்பதற்காகவே
தாயை படைத்ததாக" சொல்வார். தாயை பெருமைப்படுத்த அப்படி சொல்லி
இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.
எனக்கு ஒவ்வாமை தொந்தரவு உண்டு. அது என் உடம்பை கடுமையாக பாதிக்கும் பட்சத்தில், நான் பார்க்கவே அருவருப்பு நிறைந்தவனாய் இருப்பேன். உடம்பெங்கும் வீங்கி கொப்பளங் கொப்பளமாய்... ஆஸ்பத்திரிக்கு போனால், பக்கத்தில் அமர நோயாளிகளே கூட, யோசிப்பார்கள். என் மீது அருவருப்பு படாத ஜீவனாய் - என் தாய் மட்டுமே இருந்தாள். இயற்கை, தாய்மைக்கென்று தனியாக, இதயம் கொடுத்துள்ளதோ என்று தோன்றும். நான் என் தாயிட மட்டுமல்ல... ஒவ்வொரு தாயிடமும் இந்த உன்னதத்தை பார்க்கிறேன்.
ஒரு முறை நடிகர் குள்ளமணி சொன்னதை பகிர்ந்து கொள்கிறேன். அவர் குள்ளமாய் இருப்பதனால், அவர் வளர வேண்டி, பிறர் சொன்னதை கேட்டு,
அறுபது கிலோ மீட்டர் தூரம்- குள்ளமணியை தூக்கி கொண்டு, பாத யாத்திரையாய், வருடா வருடம் ஒரு கோவிலுக்கு செல்வாராம் குள்ளமணியின் தாய். அப்போது குள்ளமணிக்கு பனிரெண்டு வயதாம். பன்ரெண்டு வயது குழந்தையை, பலவீனமான தாயால் எப்படி அறுபது கிலோ மீட்டர் தூக்கி கொண்டு நடக்க முடியும். ஆனால் அந்த தாய் தன் பிள்ளை வளர வேண்டும் என்பதற்காக நடந்தாள். "அவர் தேய்ந்தது தான் மிச்சம். கடைசி வரைநான் வளரவே இல்லை" என்று தேம்பி தேம்பி அழுதார்.
என் தாய்க்கு, அந்நாளில் மிகப் பெரிய மனக்குறை ஒன்று உண்டு. நான் ஆறாவது ஹாஸ்டலில் படித்தேன். ஹாஸ்டலில் சேருவதற்கு முன்பு வரை, என் தாயின் மடியில் தலை வைத்து, என் தாயின் மணிக்கட்டில் வளையல்களை தள்ளி தள்ளி விட்டு விளையாடுவேன். ஹாஸ்டலுக்கு போய் வந்த பிறகு, தாய் மடி மறந்தேன். என் அண்ணன் பத்தாவது படிக்கும் வரை, அம்மாவின் மடியில் தலை வைத்து தூங்குவான். "இவன் பெரிய மனுஷன் ஆயிட்டான். அதான் அம்மா மடில படுக்க மாட்டான்" என்று என்னை கேலி செய்வாள்.
இன்று தாய்க்குரிய கடமைகள் முற்றிலும் மாறிவிட்டன. பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் இப்படி சொன்னார். "இனி அம்மாவை சமையலறையில் தேடாதீர்கள்" என்று. உண்மைதான்.
பசிக்கு சோறிட்ட தாய், இன்று குழந்தைகளின் அறிவு பசிக்கு சோறிட தயாராகி
கொண்டிருக்கிறாள். பிள்ளைகளுக்காக, தாய் ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்க்கு போகிறாள். கணினி கற்று கொள்ளுகிறாள்எல்லாவற்றுக்கும் மேலாக, என் மனதை தொட்ட ஒரு விஷயம். அந்த பெண்ணுக்கு, இப்போது முப்பது வயதிருக்கலாம். இந்த தலைமுறை பெண்ணாக இருந்தும், குக் கிராமத்தில் வளர்ந்ததால், எழுதப் படிக்கத் தெரியாது. மணமானதும், கிராமத்தில் இருந்து நகருக்கு வருகிறாள். குழந்தை பிறக்கிறது. எழுதப்படிக்க தெரியாத தன் நிலையை எண்ணி மனம் வெம்புகிறாள். பிற்பாடு தன் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டி எழுதப் படிக்க கற்று கொண்டாள். இன்று தன் குழந்தைகளுக்கு அழகாக கற்று கொடுக்கிறாள்.
நம்மில் எத்தனையோ அறியப் படாத சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் அன்னையர்கள். தமிழில் எத்தனையோ அம்மா செண்டிமெண்ட் படங்கள் வந்துள்ளன. என்னை மிகவும் கவர்ந்த படம்,
வி.சேகர் அவர்கள் இயக்கிய, "நான் பெத்த மகனே" என்ற படம். வாய்ப்பு
கிடைத்தால் பாருங்கள். கேடிவியில் ஒளிபரப்புவார்கள். ஒரு தாய் எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கு அந்த தாயே உதாரணமாய் இருப்பாள். கடைசியில், ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் அவளே உதாரணமாவாள். இரண்டுக்குமே காரணமானது அன்பு தான்.
குடும்பத்தை எத்தனையோ துயரங்கள் அண்டிய போது, "எம்புள்ளைங்க பார்த்துக்குவாங்க" என்று, எங்கள் மீது எங்களுக்கே நம்பிக்கை இல்லாத காலத்தில், எங்கள் மீது நம்பிக்கை வைத்தாள் அம்மா. தாயை பற்றி நிறைய சொல்லி கொண்டே சொல்லலாம்.
அதற்கு முத்தாய்பாக தாயின் மேன்மை சொல்லும், ஒரு பாடலுடன் இந்த பதிவை முடிக்கிறேன். அதிகம் அறியப்படாத பாடல். S.P.B பாடிய "மதன மாளிகை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது" அவரவர்கள், தத்தம் தாயின் நினைவுகளுடன், இந்த பாடலையும் கேட்டு மகிழுங்கள்.
ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் காதல் அவளின் அண்ணனுக்கு தெரியவர, எல்லா அண்ணன்களை போல அவனும் என் பேக்ரவுண்ட் எலலாவற்றையும் விசாரித்து, என்னை போன்ற பக்கி பயலை தன் தங்கை காதலிப்பதை விரும்பாமல் என்னை ஒரு நாள் தனியாய் அழைத்துப் பேசினான். கிட்டத்தட்ட ஒரு அமெரிக்கன் தமிழ் பேசியதை போல பேசினான். என்னை கொசு போல பார்த்தான். முதல் பார்வையிலேயே அவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்று புரிந்தது. எந்த அண்ணனுக்கு தான் தன் தங்கையின் காதலனை பிடிக்கும்?.
அடுத்த ரெண்டு நாள் ஷ்ரத்தா எனக்கு போன் செய்யவுமில்ல, ஆபீஸுக்கு வரவுமில்லை. போன் செய்தாலும் கட் செய்தாள். மீராவை பார்த்து கேட்டபோது வீட்டில் அவன் அண்ணன் ஒரே பிரச்சனை பண்ணுவதாகவும் உன்னை இன்னைக்கு ராத்திரி கால் செய்வதாக சொன்னாள் என்றாள். ராத்திரிக்கு நிறைய நேரம் இருந்தது. உடனடியாய் அவளூடய ப்ளாட்டுக்கு போய் பார்க்கலாமா என்று பரபரத்தேன். வேண்டாம் நாம் போய் ஏதாவது பிரச்சனை ஆகிவிடப் போகிறது என்று என்னையே தடுத்துக் கொண்டேன். ராத்திரி பத்து மணியிருக்கும் ஷ்ரத்தா போன் செய்தாள். மிக ரகசியமாய் பேசினாள்.
“ஷங்கர்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது. என் அண்ணனுக்கு உன்னை பிடிக்கவில்லை. எவ்வளவோ சொல்லிவிட்டேன். அடிக்கிறான். இதுவரை நான் யாரிடமும் அடிவாங்கியதே இல்லை தெரியுமா..? ”
“என்ன அடிக்கிறானா..? ஷ்ரத்தா நீ ஒன்றும் சின்ன குழந்தையில்லை.. ‘ம்’னு ஒரு வார்த்தை சொல்லு நான் உன்னை கூட்டிட்டு போய் கல்யாணம் செஞ்சிக்கிறேன். உங்க அண்ணன் மாதிரி ஆயிரம் பேர நான் பார்பேன். நீ தைரியமா இரு.. “ என்றேன். உள்ளுக்குள் பதட்டமாய் இருந்தது. வெளியில் தான் பேசினேனே தவிர என் வீட்டில் சொல்ல்வில்லை, அது ஒரு பெரிய விஷயம். என்னதான் என் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் அவர்களை கேட்காமல் செய்வது அவ்வளவு நல்லதாக படவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை ஷ்ரத்தா எனக்கு வேண்டும். அவ்வளவுதான்.
“ஆனால் ஒரு விஷயம் ஷங்கர். அவன் எனக்கு எதிராய் எதிர்க்க, எதிர்க்க, உன்னை அடைய வேண்டும் என்று மனதினுள் வேகம் அதிகமாகிறது தெரியுமா..? நான் என் அப்பாவுடன் பேசப் போகிறேன். நிச்சயம் அவர் என்னை புரிந்து கொள்வார் என்ற நம்பிகை இருக்கிறது. இன்னும் ரெண்டு நாளில் முடித்துவிடுவேன். அதற்கப்புறம் எல்லாமே சுபம். சரியா போயிரும்.. நீ கவலைப்படாதே.. ஓகே.. நான் நாளை பேசுகிறேன். “ என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.
இவ்வளவு இக்கட்டிலிலும் அவள் தைரியமாய் பேசியது நம்பிக்கையாகவும் இருந்தது, இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. வழக்கமாய் நாம் பேச வேண்டிய விஷயங்களை இவள் பேசியதை கேட்டு, எப்படி இவளை வைத்து சமாளிக்கப் போகிறேன் என்று.
அடுத்த ரெண்டு நாள் எனக்கு மெசெஞ்சர் மீராதான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எனக்கு அப்டேட் செய்து கொண்டேயிருந்தாள். சாயங்காலம் நேராக அவளை நேரே பார்க்க போய்விட்டேன். “உன்னை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு” என்றாள். நான் ஒரு மாதிரி டென்ஷனாய் சிரித்தேன்.
எனக்கு இந்த அவஸ்தை புதியதாய் இருந்தது. என் நண்பர்கள் இம்மாதிரி சொல்லும் போது எவ்வளவோ தடவை கிண்டல் செய்திருக்கிறேன். விட்டுட்டு வேற ஒருத்திய பாப்பியான்னு. ஆனால் என்னால் இப்போது உணர முடிந்தது.
ஒரு நாள் ராத்திரி மெல்ல என் அம்மாவிடம் என் விஷயத்தை ஆரம்பித்தேன். மெதுவாக ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவள், எல்லாவற்றையும் முடித்தவுடன், “உனக்கு அந்த பொண்ணை வச்சி காப்பாத்த முடியும்னா. .. எங்களுக்கு ஏதும் பிரச்சனையில்லை. நான் அப்பாகிட்ட பேசறேன். ஆனா ஒரு விஷயம் நல்லா யோசிச்சிக்க.. நீ சினிமாவுக்கு போவணும்.. அது இதுன்னு பேசிட்டிருக்கே.. நாளைக்கே அந்த பொண்ணு உன்னை நம்பி வந்திருச்சின்னா அதெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஒரு பொழைப்ப பார்க்க வேண்டியிருக்கும். அதுக்கும் ரெடியாயிரு..” என்றாள்.
அவள் சொன்னது என்னவோ சரி தான் என்று தோன்றியது. காதல் திருமணத்தை எதிர்க்கும் அளவுக்கு கட்டுபெட்டியான குடும்பம் என்னுடய்து அல்ல. என் கனவை, எதிர்காலத்தை என்னுடனேயே உலாவி கனவு காண்பவர்கள். அதனால் என்னுடய விரியம் அவர்களுக்கு தெரியும்.
இரண்டாவது நாள் நடு ராத்திரியில் என் போன் அலறியது. அடித்து பிடித்து எழுந்து எடுத்தேன் ஷ்ரத்தா..” உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று அலறினாள். எனக்கு தூக்கி வாறி போட்டது.. பிறகு அவள் குரலில் இருந்த உற்சாகத்தை பர்த்த போது, பதட்டம் அடங்கி, அவள் நார்மலான மனநிலை வரும் வரை காத்திருந்தேன்.
“ஷங்கர்.. ஷங்கர்.. நான் சொன்னேனல்லவா..? என் அப்பா எனக்கு எதிராய் ஏதும் செய்ய மாட்டார் என்று.. சரி என்று சொல்லிவிட்டார். எனக்கு இப்போது உன்னை பார்க்க வேண்டும் போலருகிறது.. வருகிறாயா..? இருக்க அணைச்சு ஒரு உம்மா தந்தால் தான் என் சந்தோஷத்தை அடக்க முடியும் என்று தோன்றுகிறது. வருகிறாயா..? என் வீட்டின் கீழே வந்து ஹாரன் அடி.. கீழே வருகிறேன். என்ன வருகிறாயா.? நீ வராமல் எங்கே போகப் போகிறாய்.. வருவாய் உனக்காக காத்திருப்பேன்..” என்று பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தாள்.
மணி மூணு ஆகியிருந்தது. மணி என்ன ஆகிறது? இந்த அதிகாலையில் என்ன நிலமையில் இருப்போம்.? வரமுடியுமா? முடியாதா? என்று என் நிலையில் யோசிக்காமல் உடனே வா என்று சொல்லும் போது கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், உடனே அவளை பார்க்க வேண்டும் போல இருநதது என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
வீட்டில் ஏதும் சொல்லாமல் மெதுவாக கதவை திறந்து என் சாவியை எடுத்து பூட்டிக் கொண்டு நேரே அண்ணாநகர் கிளம்பினேன். அந்த அதிகாலை பனியும்,ஊதக்காற்றும் முகதில் அடிக்க, சந்தோசமாயிருந்தது. நான் ஓட்டிய வேகத்திற்கு முகத்தில் அடித்த காற்று. ஷ்ரத்தாவும் அழுத்தமான முத்தம் போல மூச்சு முட்டியது.
அண்ணாநகரை அடைந்து அவளின் ப்ளாட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி ஹாரன் அடித்தவுடன், சட்டென அவளின் ப்ளாட் வெளி லைட் எறிந்து,பால்கனியில் எட்டிப்பார்த்து உற்சாகமாய் கையசைத்து, தடதடவென ஓடி வந்தாள். ஓட்டத்தில் அவளின் சந்தோஷம் தெரிந்தது. தடுக்க ஏதுமில்லா காட்டாறு போல கதவை பரபரப்பாக திறந்து ஓடி வந்து என் கழுத்தில் மாலையாய் கையை கோர்த்து, இடுப்பில் அவளது கால்களால் என்னை பிணைத்து, இறுக அணைத்தபடி, என் முகத்தில் வெறியில் முத்தமிட்டாள்.
“நான் சொன்னேனல்லவா.. அப்பா ஒத்துக் கொண்டுவிடுவார் என்று. என் செல்ல அப்பா.. ஸோ.. க்யூட்.. என்னிடம் கேட்ட ஒரே கேள்வி.. டூட்டூ.. அவர் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்.. நிஜமாவே உனக்கு அவன் தான் வேணுமா? என்ற்துதான். நான் ஒரே பதிலாய் அழுத்தம் திருத்தமாய் ஆமாம் என்றேன். தட்ஸ் இட்.. எல்லாம் முடிந்துவிட்டது. என் அண்ணன் முகத்தில் ஈயாடவில்லை.”
இவ்வளவு சீக்கிரமாய் ஒரு காதல் கதை சுபமாய் முடியுமா? என்று என்னால் நம்ப முடியுமா? என்றெல்லாம் யோசனை ஓடியது. இது நிஜம் தான். ஷ்ரத்தாவின் சந்தோஷம், அவளின் இறுக்கமான மூச்சு முட்டும் அணைப்பு, அவளின் கதகதப்பு எலலாமே நிஜம் தான்.
”உன் அப்பாகிட்ட என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டியா..?”
“எல்லாவற்றையும்.. உன் குடும்பத்தை ப்ற்றி கூட என் அப்பாவுக்கு தெரியும்”
“தென்.. அடுத்தது என்ன ஷ்ரத்தா..? என் வீட்டில் வ்ந்து உங்க வீட்டில் எப்போது பேச் சொல்லட்டும்?”
“அதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயம்.. உன்னிடம் பாஸ்போர்ட் இருக்கிறதா..?”
” பாஸ்போர்ட்டா? இனிமேல் தான் எடுக்க வேண்டும். ஏன்.. என்ன விஷயம்?”
“என்ன இப்படி கேட்டுவிட்டாய்.. நீ அமெரிக்கா வரப்போகிறாய் இல்லையா..? அதனால்தான்..” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தபடி..
”என்ன சொல்றே நீ.. நான் அமெரிக்காவுக்கு வருவதா.?”
”ஆமா.. கல்யாணம் பண்ணிட்டு நேரே அமெரிககா போய் செட்டிலாகப் போகிறோம்” என்றவுடன் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இம்முறையும் அவள்
மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்ன்னு சும்மாவா சொன்னாங்க.. ஆமா கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப்பயிர்தான். ஒருவனுக்கு அவனோட டேஸ்ட்டுக்கு தகுந்தமாதிரி அவனது பெற்றோர், தன்பிள்ளைக்கு ஏத்த மனைவியை எவ்வளோ கஷ்டப்பட்டு தேடி அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கிறாங்க. காதல் கல்யாணங்களில் இந்த நிலை மாறலாம். அவனே/அவளே அவன்/அவள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறாங்க. இந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவன், பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.
ஒரு பெண்ணுக்கு என்னதான் பெற்றோர்கள் வளர்ப்பில் இருந்தாலும் கல்யாணம் பண்ணிகொடுத்ததும்தான் முழு அந்தஸ்து பெறுகிறாள். அதேமாதிரி ஆணுக்கும் நேத்துவரைக்கும் அலட்சியமா நினைத்தவர்கள் இன்னக்கி ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. ஏ அவன் குடும்பஸ்தன் அவனுக்கு எல்லா முன்னுரிமையும் கொடுங்கப்பா என்று கொண்டாடுவாங்க. மனைவிதான் ஒருவனுக்கு வாழ்க்கையோட அர்த்தத்தை புரியவைக்கிறாள். அதேமாதிரி ஒருவனுக்கு பாதிபலம் அவனோட மனைவிதான்.
ஆணுக்கு இரவில் மட்டும் சுகத்தை கொடுப்பது மட்டுமல்ல பெண்ணோட வாழ்க்கை. அவனுக்கு துணையாக இருந்து அவனோட கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து அவனுக்கு நேரான வழி இதுதான் என்று சுட்டிக்காட்டிபவளும் அவனோட மனைவிதான். கணவன் எதாவது கோல்மால் பண்ணினானென்றால் அவன மண்டையில தட்டி திருத்துபவளும் அவன் மனைவிதான். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த வீட்டையும் தன் புத்தியால் திறமையால் முன்னுக்கு கொண்டுவருவது அவன் மனைவிதான்.
கணவன் இதயத்தில் மட்டும் இடம்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள மாமனார் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் இவர்களின் மனதிலும் இடம் பிடிக்கும் பெண் ஒரு புத்திசாலி என்றால் அது மிகையாகாது. தன் புகுந்த வீட்டில் எத்தனை குறையிருந்தாலும் அதனை மறைத்து தன் குடும்பத்துக்காக வாழும் ஒரே ஜீவன் மனைவிதான். இதே நகரத்தில் வாழும் பெண்கள் தன் கணவனுக்காக கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று குடும்ப கஷ்டத்தை தீர்க்க பாடுபடுகின்றனர். கணவனை ஊதாரித்தனமாக செலவு செய்யவிடாமல் கட்டுக்கோப்பாக வைத்து சிக்கனமாக்கி குடும்பத்தை முன்னேற்றுகிறாள்.
ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான் அடித்து சொல்லலாம். ஒவ்வொரு ஆணின் பலமும் பலவீனமும் அவன் மனைவிதான். புகுந்தவீட்டில் தான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் இல்லாததால் கல்யாணம் முடித்த இரண்டே நாளில் தனிகுடித்தனம் அமைக்க காரணமும் இதே மனைவிதான். மனைவி சொல்வதை கேட்டு குடும்பத்தை பிரிக்கும் ஆண்கள் தங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மனம் குமுறுவர், வேதனைக்குள்ளாவர் என்பதை அறிய வாய்ப்பில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழும் ஆண்களும், கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெண்களும் நல்லாவே வாழ்ந்ததா சரித்திரம் இல்லையெனலாம்.
அதேபோல குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டு குடும்பத்தை இரண்டாக பிரித்து தான்மட்டும் நல்லா வாழணும் என்று நினைக்கும் சுயநலமிக்க மனைவிகள் நிறைய பேர் உண்டு. மனைவி சொல்வதை கேட்கலாம் தப்பில்லை. ஆனால் அது நன்மைபயக்கும் விஷயமாக இருக்கவேண்டும். சில குடும்பங்களில் கணவனை தன் கட்டுக்கோப்பில் வைத்து மாமியார், மாமனாரை கொடுமைப்படுத்தும் மருமகள்கள் பலேபலே.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தன் பெற்றோர் பேச்சை கேட்கும் பெண்கள் ஏன் தன்கணவன் மாமியார், மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது இன்றுவரை விடை தெரியாமலே உள்ளது. அதேமாதிரி தன் பெற்றோர் பேச்சை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் ஆண்கள் நிறைய பேர் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் துணையாக வரும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது ஏனென்றே தெரியல.
இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்துவரை சென்று பிரிந்துவாழும் தம்பதிகள் நிலைமை வருத்தத்துக்கு உரியது. ஈகோவை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற தூண்கள்தான் தாங்கி நிற்கிறது. அதில் ஒன்று சரிந்தாலும் அவ்வளோதான். நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. இதில் பெரிய கஷ்டம் குழந்தைகள்பாடு திண்டாட்டம். குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.
எனவே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் ஒரு குடும்பம் ஒரு இனிய இல்லறமாகும்.