Lovebirds ன் விபரீதம்

எங்கள் வீட்டில் உள்ள lovebirds கூண்டில் ஒரு பெண் பறவை தொடர்ந்து 3 பருவங்களாக குஞ்சு பொறித்து கொண்டு வந்தது. முதலில் பானையில் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும், பின் குஞ்சுகள் சிறகு முளைத்து பானையை விட்டு வெளியே போய் பறக்கும் வரை குஞ்சுகள் உடனே இருக்கும். பிறகு மறுபடியும் அடுத்த 10 ௦ நாளில் முட்டை போட தொடங்கிவிடும். இது எங்களுக்கு தெரியாதா எதுக்கு இந்த கதைன்னு நினைக்கிறீங்களா? விபரீதமே இனி தான்........!


இந்த பெண் பறவை பொதுவா முட்டை போட்டும், குஞ்சுகளை
வளர்க்கும் காலம் முழுவதும் பானையிலே இருக்கும். வெளியில் இருக்கும் நேரம் குறைவுதான். இப்போது 4 வது முறையாக முட்டை போட தொடங்கியது. அதனால் அதிகமாக வெளீயே வருவதில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த இதனுடைய ஜோடி அதாவது ஆண் பறவை இன்று திடீரென்று பானையில் இருந்த எல்லா முட்டைகளையும்
வெளியே தள்ளி உடைத்து விட்டது.

எனக்கு பயங்கர அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!! என்னாயிற்று இந்த பறவை இனங்களுக்கு?! சந்தோசமா இருக்கிறத
விட்டுட்டு இது என்ன தேவை இல்லாத வேலை என்ற எண்ணம் வந்துவிட்டதா தெரியவில்லை. ஆனால் ஒருவிதத்தில்
அந்த ஆண் பறவையை பாராட்டலாம், தனது ஜோடியை இப்பவரை மாற்றவில்லை. கிட்டதட்ட இரண்டும்
இன்றுவரை கணவன் மனைவி போல் தான் வாழ்ந்து வருகின்றன.

LOVEBIRDS என்பதன் அர்த்தம் எனக்கு இப்பதான் புரிகிறது,
உங்களுக்கு புரியவில்லை என்றால் LOVEBIRDS வளர்த்து பாருங்கள்,
காதல் கண்ணை மட்டும் அல்ல மனதையும் சேர்த்து எப்படி குருடாக்குகிறது என்பது புரியும்!
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.
You are here : Home »

Daily Video

    Related Posts with Thumbnails