காதல் காதல் சாதல்
நுழைய நிறைய வழி உண்டு
வெளிவர வழியில்லை
ஆனால் வலி உண்டு
காதல்
வெளிவர வழியில்லை
ஆனால் வலி உண்டு
காதல்
என் முதல் முத்தம்
என் முதல் காதல்
போலவே
என் கல்லறையில் பூக்கும்
முதல் பூவையும் அறுவடை
செய்துவிடு
என் முதல் காதல்
போலவே
என் கல்லறையில் பூக்கும்
முதல் பூவையும் அறுவடை
செய்துவிடு
வா ஓடிப்போய்விடலாமென்று
சிறகு விரித்து
ஓடிவிட்டன நம் இதயங்கள்
துடிக்க இதயமின்றி
துடிக்காத உடலுடன்
சேரத் துடிக்கிறோம்
இனி வாழ்க்கை
இல்லையென்று தெரிந்தும்
அருகருகே
தோண்டப்பட்டிருக்கும்
சவக்குழிகளில்
நீ எழுதிய கவிதைகளின்
ஒவ்வொரு எழுத்துக்களுக்கும்
முதல் வாசகனாய் இருப்பதால்
இனியும் இருக்க வேண்டும்
என்பதால்
இறைவனிடம்
வரம் ஒன்று
கேட்டிருக்கிறேன்
உன் கவிதை வாசிப்பவர்கள்
அனைவரின்
கருவிழியாய்
நான்மாற
விடிய விடிய
நம் உதடுகள்
பேசிய போதும்
பேசாத
நம் இதயங்களின்
மவுனம்
கலையும் நேரங்களில்
உறக்கம் வந்துவிடுகிறது
உறக்கத்திலும்
நம் இதயங்கள்
மவுனம் கலையும்
நேரங்களில்
விழிப்பு வந்துவிடுகிறது
என்ன செய்ய?
கண்கள் காதலுக்கு
கருவறை என்றாலும்
என் கண்களுக்கு
நம் காதல்தான்
கல்லறை
பின்னே உன்னை
காணாததால்
அழுது அழுது செத்துவிடும்
போலவே