வலிகளை தாங்கிடும் இதயங்கள் எல்லாம்
விழிகளை மூடிஅழுதிடும் அன்பே...
வலிகள் நிறைந்த என் இதயம்
விழிகள் மூடி அழவும் வசதியில்லை....
நீ இருக்கும் விழிகளுக்கு
நீர் இறைக்க தெரியாது....
உனை சுமக்கும் நினைவுகளை
அழித்துவிட முடியாது....
ஏன் இந்த மனதுக்கு
காயங்கள் தந்தாய்...
காயமும் உன் காதலென்று
தெரியாமல் சுமக்குதடி....
நீ தொட்ட தேகமெல்லாம்
பட்டாக எரியுதடி....
மலராமல் என் காதல்
மொட்டோடு கருகுதடி....
சிட்டாக பறந்து விட்டாய்
சில வேடந்தாங்கலைப் போல்...
முட்டாள்கள் யாருமில்லை
என் போன்ற ஆண்களைப்போல்...
என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....!
பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ....!
நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவள்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....!
பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவன் தவியாய் தவிக்கிறான் ...!
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறான்..!
உன் கயல்விழியின் பார்வையாலே
எம்மை நீ கவர்ந்தாயே..
உன் கருங்கூந்தல் அசைவினிலே
எம்மை நீ ஈர்த்தாயே..
பசியாலே பறந்துவரும்
ரீங்காரவண்டினங்கள் -உன்
குரலோசை இனிமைகண்டு
மயங்கியங்கு நின்றதடி
எள்லோரின் இன்பத்தை
மறுகணமே துன்பமாக்கி
எங்கே நீ சென்றாயோ..?
உன் முகத்தின் பேரழகு
அனைவரையும் சாய்த்ததடி
உன் மென்னடையழகால்
ரீங்கார வண்டினங்கள்
உனை உரசிசென்றதடி ..
உன் வரவு இல்லாமல்
இளமனசு வாடுதடி
வண்டினங்கள் சாகுதடி
நீ சென்ற இடம் தெரிந்தால்
நாமெல்லாம் வந்திருப்போம்
நீயில்லா இவ்வுலகினிலே
வாழவே எமக்கு நாதியில்லை
நீ எங்கு சென்றாயோ ?
தத்தளிக்கும் ரிங்கர வண்டினங்கள்..!!!
நேரம் வரும்பொழுது நெருங்கி வா
பாவம் என்று பார்த்தால் பழிப்பார்
கோபம் கொண்ட நெஞ்சம் உலகறியும்
நீ சாணக்கியனாகும் நேரமிது!
நான் ரோஜாப்பூவை
காதல் செய்கிறேன்
அவ்வாறு இருந்தும்
ரோஜா என்னை தன்னுடைய
இதழால் அலங்கரிக்க
பயப்படுகிறது
எங்கே நான் அழகாகி
விடுவேன் என்றா? - இல்லை
ரோஜா இதழ் எனக்கு பட்டு
வலிக்கும் என்றே...!
எதை எதையோ தேடும் காதல்களுக்குள்.....
சில காதல்கள் அற்புதமானவை.
தன் மனதில் நின்றவளின்
இதயத்தை மட்டும் தேடுபவை....!!
என் காதலும் அது போலத்தான் பெண்ணே!!
உன் நளினங்களை மட்டுமல்ல...
உன் கோபங்களையும் ரசிக்கிறேன்..
சித்திரங்கள்!! சிலைகள்!!
உலகத்தின் அனைத்து அற்புதங்களும்
நீ தான் எனக்கு!!!
விலை மதிப்பே இல்லாத
பொக்கிஸமாய் நினைக்கிறேன் உன்னை.....
ஒவ்வொரு நொடிகளையும் எண்ணுகின்றேன்!!...
உனை கைபிடிக்கும் நாளுக்காக...
என் மரணத்தில் கூட
அழுது விடாதே.
உயிர்த்தெழுந்து விடப்
போகிறேன் என் விரல் கொண்டு..
உன் கண்ணீர் துளிகளை துடைக்க ...!
கண் சேர்த்துப் பார்த்த காதல்..
என் மனதோடு மறித்துப் போகிறது...!
மறந்தும் வருந்தாதே...
உன் மலர் முகம் வாட மறுக்குமென் நெஞ்சு...!
ஒரு மலர் மட்டும் வைத்துவிடு
என் கல்லறையின் மீது
உன் நினைவோடு கனக்கும் என் நெஞ்சு
உன் வாசம் சுமந்து போகும்..!
உரச உரச வருகுது நெருப்பு...
உன்னைப் பார்த்ததும் வருகுது சிரிப்பு...
ஆடை இல்லா மேனியை
ஆளும் சக்தி எனக்கில்லை.
நான்கு சுவர்களின் மத்தியில்
கூட்டம் போட்டு பேசுவோம்.
நீயும் நானும்.. சேரும் காலம்.
வரும்.. வரும்.. வரும்.
காதல் வசனம் பேசமுன்
காமம் பற்றி பேசுவோம்.
வீசும் காற்றை தூது சொல்ல...
பேசும் உயிரைக் கொடுத்திடுவோம்.
காதல் என்ற பூஜை அறையை
காம நூலாய் மாற்றிடுவோம்.
இதய அறையில் குடி கொண்டு...
இரவு இன்றி வாழ்ந்திடுவோம்.
ராகம் கேட்டு பாடமுன்
ராசிப் பலனைப் பார்த்திடுவோம்.
பூசும் மஞ்சள் கிண்ணத்தில்...
புதிய உலகம் படைத்திடுவோம்.
உலகை ஆளும் சக்தி எல்லாம்
உனக்கும் எனக்கும் பாதி பாதி.
உள்ளம் கவர்ந்த காதலனாய்...
காலமெல்லாம் நீ வேண்டும்.
என்னுயிரை எடுத்து தந்துவிட்டேன்
எனக்கு நீ... தான் நீதிபதி.
காதல் என்னும் சின்னத்தில்...
இருவர் நாமம் பதியட்டும்..
என்னடி பெண்ணே
எது உந்தன் காதல் அகராதி
விளங்காது விழி பிசுங்கி நிற்கும்
விடலை ஆண்யாதியில் நானும் ஒருவன்...
கழிவு என்று தூக்கிப்போட்ட
காகிதத்தை கூட சேகரித்தாய் பொக்கிஷம் என்று
காதல் ஜனனித்த முதல் மதங்களில் .....இன்று
கழிவு நீ என்று என்னையே தூக்கிப்போட்டாயே!!!
என்னடி நியாயம் இது ? !!
எங்கு நான் போய் சொல்ல ?
காதல் கண்களில் ஜனனிகிறது,
கண்ணீரால் அவ்வலியை இறக்கி வைக்க முயன்றாலும் ,
இதயத்தை குடைகிறது.....
இனிமையை கலைக்கிறது...
இக்கரை இருந்தவரை என்னிடம்
சக்கரை போல் இனிய காதல் கதை சொன்னவள்
அக்கரை சென்றதும் அடியேனை மறந்தாளே
எக்கரை போய் இதை நான் சொல்ல
கவிஞன்கள் பல முன்மொழிந்தனர் _தம்
கவிக்கு முகவரி தந்தது கன்னி என்று _இன்று
இக்கவியில் நான் முன்மொழிகிறேன்
என் கல்லறைக்கு வழிமொழிந்தது கன்னியே...
என் காதல் தேவதையே....
காதலை மட்டும் ஆயுதமாக்கி
காணுகின்ற பெண்களையெல்லாம்
காமக் கழியாட்டத்திற்காக
காது குத்த நாடுகிறாய்...
மலர்விட்டு மலர் தாவும் வண்டாய்
மங்கையர் மனங்கவர்ந்து
மட்டற்ற மகிழ்ச்சியும் அதில் கண்டு
மதி கெட்ட வழியில் தொடர்கிறாய்
கன்னி அவளின்
கருணை உள்ளம் மயங்கிட
கதிரவனாய் காட்சிதந்து
கண்ணனாய் நீயும் மாறுகிறாய்
உன்தேவை தீருமட்டும்
உத்தமனாய் ஒப்புவித்து
உறிஞ்சி நீயும் அருந்திவிட்டு
உத்தரவு பெறுகிறாய்
உத்தமியான பெண்ணவளும்
உணராத திருவிளையாடலில்
உழைச்சலையும் தான்பெற்று
உயிரையும் விடுகிறாள்
எதுவும் அறியாப்பாலகனாய்
எட்டி நின்று முகம் நிறுத்தி
எங்கு இருக்கிறாள் இன்னொருவள்
என்றல்லவா தேடுகிறாய்
காமம் உன் கண்ணை மறைக்க
காதலுக்கு துரோகம் செய்து
காமுகனாய் வலம்வரும்
காடயனாம் நீ அல்லவா
தெருவெங்கும் தினம் தோறும்
தொலை பேசித் தொடர்ந்தவளே..
துணையென்று வந்து விட்டு
துயர் தந்து விலகலாமோ..??
பருவங்கள் கடந்தது உன்
பாசம் என்று சொன்னவளே..
பாதி வழியில் நீ இன்று
பாதை மாறிப் போகலாமோ..??
உருவங்கள் ஓட்டாதென்று
உதறிப் போனவளே - என்
உணர்வுகளில் இன்னும் நீ
ஒன்றித்து வாழ்வதேனோ..??
கிரகங்களால் கேடு என்று
கண்ணீரால் கரைத்தவளே - பரி
காரங்கள் சொன்னபின்பும் உன்
காதலை நீயே கொல்வதேனோ..??
கண்களால் என்னை மயக்கி
காதல் வலையில் சிக்க வைத்து
நிமிர்ந்து நின்று
உன்னைக் காதலித்தேன்
உனக்குள் முக்கோண காதல்
இருப்பது தெரியாமல்
தெரியாமல் கைப் பிடித்தேன்
தேய்ந்து போனது நம் உறவு
தவறே செய்யாத எனக்கு
நீ கொடுத்த தண்டனை தனிமை
என் நெஞ்சில்
எது வித மாற்றமில்லை..
ஏன் இன்று மறந்து
போனாய் உனது சொல்லை??
என் வலிகள் ஏன்
உனக்கு புரியவில்லை?
இதுதான உன்னுடைய
காதல் எல்லை??
உண்மையான அன்பு
என்னைத் தேடும் வரை
உறங்காமல் காத்திருப்பேன்
இறுதி வரை..
உணர்வுகள் ஆறுமோ
தெரியவில்லை??
உண்மை அன்பு
ஒரு போதும் சாவதில்லை..
உன்னை விடை கொடுத்து
பிரிய போகும்...
நிமிடங்களில் தான் நான் அறிந்தேன்
பிரிவின் வலியை...
விடை கொடுக்க மனம் இன்றி
உன் இதயத்துடன் போராட்டம்
நடத்தி கொண்டிருக்கின்றேன்..
உன்னை நான் பிரியவா இல்லை
உயிரை நான் பிரியவா...
இரண்டு வினாக்களுக்கும்
மத்தியில் என் பயணம்
நீ அறிவாயா நீ....
அப்படி என்ன
நீ அழகாய் தான் இருப்பாயா...
இல்லையே....
அப்படி என்றால் இதுவரை நீ அன்பாய் தான்
பேசியிருப்பாயா... இல்லையே..
இருந்தும் உன்னை தான் என் மனம்
தொடர விரும்புகின்றது..
தனிமையில் உன் நினைவுகளுடன் தான்
வாழ்கின்றேன்..
நீ என் பக்கம் திரும்புவாய்
என்ற நம்பிக்கையுன்...
உன் இதயத்தில் நான் இல்லையா...
உன் வார்த்தையால் என்னை கொள்ளாதே...
உன்னிடம் பேசிட ஆசைகள்
கோடிதான் இருந்தும்
முடிவதில்லை... உன்னுடன்
பேசிவிட....
நீ சினுங்குகின்றாய்..
சிறுபிள்ளை போல்
உன் சினுகள்களில் நான்
உனக்குள் சிறையாகி போகின்றேன்..
உன் இதயத்தில் ஓர் இடம் வேண்டும்
எனக்காக... தருவாயா...
புதுநிலா புன்னகைத்தாய்
பௌர்ணமி என உரைத்தாய்
மயங்கினேன் பெண் உனக்காய்
மறைமுகக் காதலிட்டாய்
விண்ணிலே வெட்கம் சிட்டாய்
பறந்ததே பூக்கும் மொட்டாய்
புரிந்ததால் புலமைப் பித்தாய்
புகழிடப் போர் தொடுத்தாய்
பொய்களால் என்னை சுட்டாய்
பொறுமைக்கு விலங்கு இட்டாய்
தாயக தாய்மை சொத்தாய்
இருந்த மண் பெண்மை வித்தாய்
புனலிடை வெம்மை என்றாய்
அனலிடை குளிர்மை கொண்டாய்
திருமணத் திடலில் நின்றாய்
நகைகளால் மின்னும் முத்தாய்
உன்நெற்றியில் சிவப்புப் பொட்டாய்
இருக்கும் என் ஆண்மை பட்டாய்
நம்பினேன் இவற்றை முற்றாய்
நளினத்தில் நகைமை விட்டாய்
நடித்திடும் நாடகக் கதையாய்
எழுதிடும் கவிஞர்கள் பாட்டாய்
ஆடிடும் நடன நளிர்ப்பாய்
இசைத்திடும் நாதங்கள் மெட்டாய்
போனதே
என் காதல்
காற்றாய்
என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்
உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை
நீ கிழித்தெறிந்ததில்தான்
கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது
உன்னால் பாவமாக்கப்பட்ட
எனக்கு பிறந்ததை தவிர
உன்னைச் சுமந்தே
சுமை தாங்கியான என் இதயம்
ஏன் நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக் காலில் நிற்கிறது
யார் யாரோ
என்னை பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு பிடுங்கி
எறிந்துவிட்டு போக
என்னைப்போல்
உனக்காக யாருமில்லை என்றாய்
உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி ஏமாற்றியதில்லை
என் விழிகள்
கனவில் எழுதிய கவிதை
ஒன்று காணாமல் போனது
கண்டு கண்ணீர் விட்டது...
ஒரு வேளை என் இதயம்
என் உயிரில் வரைந்த ஓவியம்
ஒருகணம் மறைந்தால்
என் இதயம் துடிப்பை
அல்லவா நிறுத்தும்
தினம் ஒரு கவிதையை
தினம் ஒரு காட்சியை இனிய கனவாக
கற்பனையுடன் என்னுள் மலர
வைத்துக் கொண்டிருக்கிறது
என் மீதான உன் காதல்
என் காதலை புறக்கணித்து விட்டு
நீயே எனக்கு
ஒரு வரன் பார்த்து
முடிவு செய்ய சொல்லி விட்டு
சென்று விட்டாய்
எனக்கு மட்டும்
ஏன் இந்த வேதனை...?
என்னை ஜடம் என்று
நினைத்தாயா ?
என் உயிரே
உயிரை எடுத்தும் வாழ்கிறேன்
நீ இந்த உலகத்தில்
இன்னும் வாழ்வதால்......!!!
படிப்பதற்கு சில SMSகளை தந்த நீ
பார்த்துக் கொண்டிருப்பதற்கு – உன்
புன்னகை முகத்தை தந்த நீ
விழிப்பதற்கு உன் இரு கண்களை தந்த நீ
நான் என்னை வெறுப்பதற்கு – ஏன்
ஒரு கீசா
நஞ்சு தரமுடியாது?
உண்மையை சொல்லுகிறேன்
உன்னை எனக்கு பிடிக்கும்
உன் உறவுகளையும் பிடிக்கும்
உன்னால் நான் அடைந்த
அந்த சந்தோசங்கள் கூட
இன்று
என்னை நினைத்து ஏங்குதடி
காரணம் எனக்கான தேவதை நீ
ஏசாமல் பேசாமல் மௌனிப்பதை பார்த்து
உன்னால் கிடைத்த சந்தோசம் பாதி
உன்னால் கிடைத்த கண்ணீர் பாதி
கடைசியில் கைவிட்டு செல்லாதே
மண்ணுக்கு அனுப்ப
மருந்தொண்டு தா, பெண்ணே
நிம்தியாய் சென்று விடுவேன்!
மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்
சேர்ந்து வாழ்வோம்
சிறகுள்ள பறவைகளாக.
நினைவுக்கு நீயே கண்ணாடி
நிலைகெட்ட பெண்ணின் முன்னாடி...!
அன்புக்கு நீயே உயிர்நாடி
அணைக்க மறந்தாய் பின்னாடி...! (நினைக்க மறந்தாய் பின்னாடி)
தலைமுதல் கால்வரை தழுவ நினைத்தேன்....
தடைவரும் என்று நீ விலக நினைத்தாய்..._என்
கால்கள் செல்ல தூரம் தொல்லை..._உன்
கண்கள் வந்து காணவில்லை...!
மங்கள நாளும் நமக்கு இங்கு இல்லை _நீ
குங்குமம் தந்த நாயகன் இல்லை...!
போராடும் என் வாழ்வில் ஓடோடி வந்தாய்...
நீரோடும் கண்ணுக்கு ஆறுதல் தந்தாய்....!
உறவென்று சொல்லி உரிமையாய் அழைத்தாய்
துணையின்றிபோக தனிமையில் தவித்தாய்...!
ஆயிரம் ஆசைகள் நினைவினில் வளர்த்தாய்
அன்பென்று சொல்லி அழகாய் நடித்தாய்...!
கண்கள் கதை பேசும்
கற்பனைகள் வழிந்தோடும்.
கனவுகள் இமை தேடும்..
கவிதைகள் சுவை சேர்க்கும்.
தூக்கம் மறந்து போகும்..- அன்புத்
தொல்லைகள் சுகமாகும்..
ஏக்கம் தினம் கூடும்..
எல்லைகள் இனி விலகும்..
தனிமையில் மனம் பேசும்..-கணம்
தவிப்பதே யுகமாகும்..
இதயங்கள் ஒன்றாகும் - காதல்
இனித்திடும் வலியாகும்..
கோயிலுக்கு போனாலாவது
உன்னை ஞாபகப்படுத்த எதுவும்
இருக்காது என்றுதானிருந்தேன்
ஏனோ என்னை கண்டதும் குருக்கள்
உந்தன் பெயரில் உள்ள மந்திரத்தையே
திரும்ப திரும்ப சொல்கிறார்
உன்னை சந்திக்க பேருந்தில்தான்
வருகிறேன் ஏதோ நான் விமானத்தில்
வருவது போல் இடுப்புபட்டியை தேடுகிறேன்
எனக்காக நீயும் உனக்காக நானும்
விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
இன்னும் பிரியாமல் கூட வருகிறது
சமாதான புறாவாக நம் காதல்
உன்னை சந்திக்கும் போது
கருக்கொள்கிறது உன்னை
பிரியும்போது கவிதையாய் பிறக்கிறது
தயவு செய்து என்னை கவிஞன்
என்று உண்மை சொல்லாதே கிறுக்கன்
என்று பொய் சொல்லிவிடு அது போதும்
எனக்கு நான் பொய் சொல்லாதவன் என்று
நீ நம்பிவிட
நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும்
நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும் எங்கிருந்து
வந்தாய் நீ என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின் சொந்தகாரியாகவும்
உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...
......................................
இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !
**********************
வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......
***********************
இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
*
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
*
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?