நேற்று இறந்து விட்டேன்



சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...



என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.
You are here : Home »

Daily Video

    Related Posts with Thumbnails