உன் உதடுகளின்
மௌனம் என்
வார்த்தைகளின் விரதம் .......!
அப்பொழுதுதான் விரிந்த
மல்லிகைமொட்டின்
வாசம் உன் நேசம்...
அந்தி மஞ்சள் மாலையின்
மெல்லிளம் கதிர்போல்
உன் பாசம்,,
இளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம்,,,,,
இனி எப்போதும் இப்போதும்
தொடர்ந்து வரும் காலத்திலும்
உன் நினைவே என் சுவாசம்,,,!
அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள்
இந்த குட்டி இதயத்தில்
இங்கும் அங்கும் முட்டி மோதி
நிரம்பி வழிகிறது
உன்னை நினைத்தலின் உச்சங்களில் .!
மழ்ச்சியின் வார்த்தைகள்
மெல்ல கரை உடைக்கிறதுஎன் பெயரையும் உன் பெயரையும்
ஒன்றாய் இணைத்து உன் இதழ்கள்
உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் .!...
நீ வெட்கத்தால் தலைகுனிந்து
நடப்பதால்தான் என்னவோ
என் பார்வைகளும் கவிழ்ந்தே
உனக்காக காத்துகிடக்கின்றன
வரும் வழியெங்கும் .
நீ உதிர்த்து சென்ற
சிறு புன்னகையின் ஸ்பரிஷத்தில்
மலர்ந்த பூக்காளாக !
என் பார்வைகளும் கவிழ்ந்தே
உனக்காக காத்துகிடக்கின்றன
வரும் வழியெங்கும் .
நீ உதிர்த்து சென்ற
சிறு புன்னகையின் ஸ்பரிஷத்தில்
மலர்ந்த பூக்காளாக !
You are here : Home »
